யாழில் பொலிஸாரின் உடந்தையுடன் வாள்வெட்டு தாக்குதல்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
வெளிநாட்டவர் ஒருவரிடம் யாழ். நெல்லியடி பொலிஸ் பொறுப்பதிகாரி இலஞ்சம் பெற்று வந்துள்ளதாகவும் இதன் காரணமாக தன்மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலானது பொலிஸாரின் உடந்தையுடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
குறித்த விடயம் சிவில் குற்றச்சாட்டாக கருதப்படுவதால், பொலிஸார் நேரடியாகத் தலையிடமுடியாது.
முறைப்பாட்டின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்து நீதிமன்றில் முற்படுத்தியிருக்க வேண்டும்.
வீட்டிற்குள் புகுந்து தாக்குதல்
மாறாக எதிராளிகளிடமிருந்து அதாவது வெளிநாட்டவரியமிருந்து இலஞ்சத்தைப் பெற்றுக் கொண்டு நேரடியாக எனது வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடாத்தி எனது உடமைகளை தூக்கி வெளியே எறிந்தனர்.
அத்துடன் பொலிஸாரின் ஆதரவுடன் என்மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. நான்கு நாட்களாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்ப்போது வீடு திரும்பியுள்ளேன்.
பொலிஸாரின் அடாவடி தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக் குழுவிலும், பொலிஸ் மாவட்ட பிராந்திய பொறுப்பதிகாரியிடமும் முறையிட்டைள்ளேன்.
மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. பொலிஸ் அதிகாரியின் இந்த நடவடிக்கையானதை இலஞ்சத்தைப் பெற்றுக் கொண்டு மக்களுக்கு எதிராக செயற்படுவது தொடர்பில் அச்சமேற்பட்டுள்ளது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம், வெளிவந்த உண்மை.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர்.., திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால் நடந்த திருப்பம் News Lankasri
