கௌதாரிமுனையில் இளைஞர் கொலை விவகாரம் : நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!
கிளிநொச்சி - பூநகரி, கௌதாரி முனையில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அன்றைய தினம் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி கௌதாரிமுனை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா சென்றிருந்த இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இக் கொலையுடன் தொடர்புபட்ட சந்தேகநபர்கள் நால்வர் நேற்றைய தினம் பூநகரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒரு பெண் உட்பட நான்கு பேரும் இன்றைய தினம் (28-12-2021) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்று பதில் நீதவான் திரு எஸ் சிவ பாலசுப்பிரமணியம் முன் நிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இளைஞர் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் நால்வர் கைது

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
