164 பேரை ஏமாற்றி பெண் செய்த பாரிய மோசடி அம்பலம்! சிக்கிய பல தொழிலதிபர்கள்
தொழில் அதிபர்கள் உட்பட பலரை ஏமாற்றி பெருந்தொகை பணத்தை மோசடி செய்த பெண் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் இலவசப் காணிப் பத்திரங்களை வழங்குவதாக சுமார் 100 மில்லியன் ரூபாய் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 26ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் கைது
2024ஆம் ஆண்டில் 164 வணிக உரிமையாளர்களை நிதி மோசடி செய்ததற்காக இந்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பக்கமுன, மகரகம பகுதிகளை சேர்ந்த சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொழிலதிபர்களுக்கும் ஏமாற்றம்
உருமய இலவசப் காணி பத்திரத் திட்டத்தின் கீழ் பத்திரங்களை வழங்குவதாக கூறி 164 பேரை ஏமாற்றியும் , பின்னர் ஒரு வழக்கறிஞராக நடித்து ஒவ்வொருவரிடமிருந்தும் 600,000 ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரான பெண் கல்முனையைச் சேர்ந்த சுமார் 50 தொழிலதிபர்களை அரசியல் பற்றி விவாதிக்க சிறிகொத்தா தலைமையகம் மற்றும் கொழும்பில் உள்ள முக்கிய விடுதிகளுக்கு வரவழைத்து, இலவசப் பத்திரங்களை வழங்குவதாக கூறி, அவர்களையும் ஏமாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.



