கொழும்பில் துப்பாக்கிச்சூடு! சிகிச்சை பெற்று வந்த இளைஞன் பலி
கொழும்பில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞரே இன்று(26.12.2025) உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
கொழும்பு - கொஹுவலை பகுதியில் கடந்த 22 ஆம் திகதி முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், முச்சக்கர வண்டியை இலக்கு வைத்து கைத்துப்பாக்கியால் 3 தடவைகள் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் இளைஞரின் வலது கை மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.

உயிரிழந்த இளைஞர், தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் 'அவிஷ்க' என்ற போதைப்பொருள் கடத்தல்காரரின் நெருங்கிய நண்பர் என்பது பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், அவிஷ்கவின் நிதி விவகாரங்களை மேற்படி இளைஞரே கையாண்டு வந்துள்ளார்.
இந்தத் துப்பாக்கிச்சூடு மற்றுமொரு போதைப்பொருள் கடத்தல்காரரான “பெடோவிட்ட அசங்க” என்பவரின் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பெடோவிட்ட அசங்கவின் ஆலோசனையின் பிரகாரம், 'சாண்டோ' எனப்படும் நபரால் குறித்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என்றும் தப்பியோடிய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானிய ஏவுகணையை பயன்படுத்திய உக்ரைன்: ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri