கலிபோர்னியாவை தாக்கிய சக்திவாய்ந்த புயல்: 6 மாவட்டங்களுக்கு அவசரநிலை அறிவிப்பு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் Atmospheric River என அழைக்கப்படும் சக்திவாய்ந்த புயல் காரணமாக பலத்த மழை மற்றும் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறி, கலிபோர்னிய ஆளுநர் கவின் நியூசம் (Gavin Newsom) ஆறு மாவட்டங்களுக்கு அவசரநிலையை அறிவித்துள்ளார்.
குறித்த அறிவிப்பு, மக்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் கிறிஸ்துமஸ் தினமான நேற்று(25.12.2025) விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வளிமண்டலத்தில் வெப்பமண்டலப் பகுதிகளில் இருந்து நீராவியை சுமந்து வரும் இந்த Atmospheric River புயல் நிலப்பரப்பைத் தொடும் போது மிகக்கடுமையான மழையை தரும் வாய்ப்பு உள்ளது.
தென் கலிபோர்னியாவில் வழக்கமாக இந்த காலப்பகுதியில் பெய்யும் மழையை விட சுமார் 10 மடங்கு அதிக மழை பெய்யக்கூடும் எனத் தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்தக் கடுமையான இயற்கை சீற்றத்தினால் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் மரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மலைப்பகுதிகளில் இருந்து சேறு மற்றும் இடிபாடுகள் வீதிகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கியுள்ளது.
குறிப்பாக, ஆண்டின் தொடக்கத்தில் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் சுமார் 130 இடங்களுக்கு வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மின்சாரத்தடையால் அவஸ்தைப்படும் மக்கள்
மழையுடன் சேர்த்து மலைப்பகுதிகளில் கடும் பனிப்பொழிவும் நிலவுவதால் போக்குவரத்துப் பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அத்துடன், புயல் காரணமாக மின்சாரத் தடையை எதிர்கொண்ட 1.65 இலட்சம் வீடுகளுக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ள போதிலும், சீரற்ற வானிலை காரணமாகப் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Atmospheric River (விண்ணுலக ஆறு) எனப்படுவது, வளிமண்டலத்தில் மிக நீளமான மற்றும் குறுகிய பரப்பளவில் நீராவியைச் சுமந்து செல்லும் ஒரு பிரம்மாண்டமான "ஈரப்பத நதி" போன்றதாகும்.
வெப்பமண்டலக் கடற்பகுதிகளில் இருந்து உருவாகும் இந்த நீராவிப் படலம், நிலப்பரப்பையோ அல்லது மலைகளையோ மோதும் போது குளிர்ந்து அதிதீர மழையாகவோ அல்லது பனியாகவோ பொழிகிறது.
இது உலகின் மிகப்பெரிய நதிகளை விட அதிக அளவிலான நீரை நீராவியாகச் சுமந்து செல்லும் திறன் கொண்டது என்பதால், குறுகிய காலத்தில் பெரும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளை ஏற்படுத்தும் அபாயம் கொண்டுள்ளது.
இருப்பினும், பல நாடுகளின் நன்னீர் தேவையைப் பூர்த்தி செய்வதிலும் வறட்சியைப் போக்குவதிலும் இத்தகைய வான்வழி ஆறுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam
இந்தியாவிலேயே அதிகபட்ச விலை.. துரந்தர் ஓடிடி உரிமை வாங்கிய நெட்பிலிக்ஸ்! புஷ்பா 2 சாதனையை தகர்த்தது Cineulagam
பிரித்தானிய ஏவுகணையை பயன்படுத்திய உக்ரைன்: ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் News Lankasri