நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படும் 21ஆவது சுனாமி நினைவேந்தல்
சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (26.12.2025) மன்னார் பிரதான பாலத்தடியில் முன்னெடுக்கப்பட்டது.
கலங்கரை கலை இலக்கிய நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் அதன் இயக்குனர் ஏ.ரி.மேகன்ராஜ் தலைமையில் குறித்த நினைவேந்தல் இடம்பெற்றது.
சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் காலை 10.25 மணியளவில் குறித்த கடற்கரை பகுதியில் தீபம் ஏற்றி மலர் தூவி உயிர் நீத்தவர்களுக்காக உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் இணைந்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை நினைவேந்தல் நிகழ்வுகள் மன்னார் மாவட்டச் செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே.திலீபன் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மற்றும் திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டு தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மன்னார் செய்தி - ஆஸிக்
உடுத்துறையில் சுனாமி நினைவேந்தல்
21ஆவது சுனாமி நினைவேந்தல் உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் இன்று(26) காலை 9:30 மணியளவில் பொது நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமானது.
அஞ்சலி

சுனாமி பேபி


2 நிமிட மௌன அஞ்சலி

ஹட்டனில் நினைவு தினம் அனுஷ்டிப்பு
மேலதிக தகவல்- மலைவாஞ்சன்
ஆழிப்பேரலை
சுனாமி அனர்த்தம் இடம் பெற்று இன்றுடன் (26) 21 ஆவது வருட நினைவு தினத்தை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெயகௌரி ஸ்ரீபதி தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் இடம் பெற்றது.
ஆழிப்பேரலையின் போது உயிர் நீத்த உறவுகளுக்காக இரு நிமிட மௌன அஞ்சலியுடன் இறை வணக்கமும் இடம் பெற்றது.

இதன் போது சுனாமி தொடர்பிலான நினைவு பேருரையும் இடம் பெற்றதுடன் திட்வா புயல் அனர்த்தம் தொடர்பிலான நினைவுகளும் பேருரைகளான பிரதேச செயலாளர் உரையாற்றினார்.
இதில் உதவிப் பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் உட்பட பதவி நிலை உத்தியோகத்தர்கள்,சக உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலதிக தகவல்-ரொசான்
மட்டக்களப்பு
ஆழிப்பேரலை சுனாமி தாக்கம் ஏற்பட்டு இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இதனை நினைவு கூர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிலையில் ஓந்தாச்சிமடம் கிராமத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவுத் தூபியில் உயிரிழந்தவர்களுக்கு சுடர் ஏற்றி, மலர்தூபி உறவினர்கள் அஞ்சலி தெலுத்தியுள்ளனர்.
இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உருத்திரன் உதயஸ்ரீதர், பிரதேச சபைத் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், ஏனைய கிராம மட்ட பொது அமைப்புக்கள், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.



செய்தி - ருசாத்
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
9.00 மணி 15 நிமிடத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து 9.00 மணி 25 நிமிடத்தில் அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த அஞ்சலி நிகழ்வில் சர்வமதத்தலைவர்கள் ,கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப்பொலிஸ்மா அதிபர், கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மாவட்ட செயலாளர் உள்ளிட்ட மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் ,உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.



செய்தி - தேவந்தன்
முல்லைத்தீவு
கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் 26.12.2025 இன்று உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
அந்தவகையில் உயிரிழந்தவர்களின் உறவுகள் கதறி அழுது கண்ணீர் மல்க, தமது உயிரிழந்த உறவுகளுக்கு மலர் தூவி, தீபமேற்றி, உணவுப்பொருட்களைப் படையலிட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலிகளை மேற்கொண்டனர்.
அதேவேளை உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி மத வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தன. மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



செய்தி - சதீஸ்
யாழ்.வடமராட்சி கிழக்கு - உடுத்துறை சுனாமி நினைவேந்தல்
சுனாமி ஆழிப் பேரலையின் 21ம் ஆண்டு நினைவு நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.வடமராட்சி கிழக்கு - உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு 9.25 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மாலையிட்டு தீபங்கள் ஏற்றி உணவுகளை படையலிட்டு உறவுகள் அஞ்சலித்தனர்.
கடந்த 2004 டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை பேரனர்த்தம் காரணமாக பல்லாயிரம் பொதுமக்கள் உயிரிழந்ததுடன் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் அழிந்தமை குறிப்பிடத்தக்கது.



செய்தி - தீபன்
விசேட ஞாபகார்த்த தின நிகழ்வு
சுனாமி அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் (26) 21 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில், அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஈடேற்றத்திற்கான விசேட ஞாபகார்த்த தின நிகழ்வும், துஆப் பிரார்த்தனையும் மூதூர் - தக்வாநகர் ஜும்ஆ பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

இதில் பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டு தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.
மேலதிக தகவல்- கியாஸ் ஷாபி
கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
9.00மணி 15நிமிடத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டத்தைத்தொடர்ந்து .9.00மணி 25நிமிடத்தில் அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலதிக தகவல்-தேவந்தன்
மலர் அஞ்சலி
21 வது சுனாமி நினைவேந்தல் கட்டைக்காடு சென்மேரிஸ் கடற்தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் கட்டைக்காடு சென்மேரிஸ் சுனாமி நினைவாலயத்தில் இன்று காலை 9:30 மணியளவில் பொது நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமானது.

இதில் மலர் மாலையினை பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர் பி.அலஸ்ரன் அணிவித்ததுடன் அஞ்சலி நிகழ்வை உயிரிழந்தவர்கள் சார்பாக உறவினர் ஒருவர் ஆரம்பித்து வைக்க அதனை தொடர்ந்து மலர் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.
மேலதிக தகவல்- எரிமலை
அஞ்சலி
தேசிய பாதுகாப்ப தினமம், சுனாமி ஆழிப் பேரலையின்21 வது அண்டு நினைவு தினமும் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செய்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
மேலதிக தகவல்-ருசாத்
புதுக்குடியிருப்பில் நினைவஞ்சலி
ஆழிப் பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(26) காலை 8.05 மணியளவில் புதுக்குடியிருப்பில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையுடன் இணைந்து சுனாமியால் உயிர்நீத்த ஆயிரக்கணக்கானவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள புதுக்குடியிருப்பு ஐயனார் கோவிலடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவாலயத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், சுனாமியால் பறிபோன மூன்று பிள்ளைகளின் தாய்மார்களால் பொது சுடர் ஏற்றப்பட்டு, நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலதிக தகவல்- ஷான்
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் விசேட அனுஷ்டிப்பு
2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமிப் பேரழிவின் 21 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(26) மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை நாடு முழுவதும் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டுள்ளதுடன், சுனாமி மற்றும் பிற இயற்கை பேரழிவுகளால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதையும் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மேலதிக தகவல்- ரொஷான்
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri
பிரித்தானிய ஏவுகணையை பயன்படுத்திய உக்ரைன்: ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் News Lankasri
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri