மின்னல் தாக்கி இளைஞர் பலி! (Video)
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் மின்னல் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பளை கிழக்கை சேர்ந்த 34 வயதான மகாலிங்கம் இராகவன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இடியுடன் கூடிய மழை
குறித்த இளைஞன் இன்று (06.10.2022) காலை அம்பனை பகுதியில் அமைந்துள்ள தமது தோட்டத்தில் வேலையில் ஈடுபட்டிருந்த தந்தைக்கு உணவினை கொண்டு சென்ற வேளை தோட்ட பகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் - தெல்லிப்பளை காங்கேசன்துறை பகுதிகளில் இன்று காலை திடீரென இடியுடன் கூடிய கடும் மழை பெய்த நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இழப்பீட்டு தொகை
இந்நிலையில் குறித்த இளைஞருக்குரிய இழப்பீட்டு தொகையினை அனைத்து முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடாக பெற்று கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார்.
மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்தவருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் அனர்த்த இழப்பீட்டு நிதியினை பெற்று கொடுப்பதற்குரிய அனைத்து விபரங்களும் தெல்லிப்பளை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஊடாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக உயிரிழந்தவரின் இறப்பு
சான்றிதழ் கிடைத்தவுடன் அரசாங்கத்தினால் வழங்கப்படும் இரண்டரை இலட்சம் ரூபா
இழப்பீட்டு நிதியினை உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு விரைவில் பெற்று
கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
