யாழில் அதிக போதைப்பொருள் பாவனையால் இளைஞன் மரணம்
யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் நுகர்ந்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
குருநாகல் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
மின்சார உபகரண விற்பனைக்காக குறித்த இளைஞன் யாழ்ப்பாணத்திற்கு வருகைத்தந்துள்ளார்.
அதிக ஹெரோயின் பாவனை

இந்நிலையில் கல்வியங்காட்டில் அவர் நேற்றையதினம்(03.08.2023) உபகரணங்களை விற்பனை செய்துகொண்டிருந்தவேளை மயங்கி விழுந்துள்ளார்.
இதன் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இதற்கமைய ஹெரோயினை பாவித்துவிட்டு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதுடன், அதிக ஹெரோயினை பாவித்தமையால் குறித்த மரணம் நிகழ்ந்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri