அம்பாந்தோட்டையில் விபத்து! மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் உயிரிழப்பு
அம்பாந்தோட்டை - பெலியத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (14.05.2026) மாலை இடம்பெற்றுள்ளது.
பெலியத்தை பகுதியில் மோட்டார் சைக்கிளும், ஹயஸ் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன.
இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி செய்தி - அடுத்தடுத்த வாரங்களில் ஏற்படப்போகும் விலை மாற்றம்
இந்த விபத்தின் போது பலத்த காயமடைந்த மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சாரதி கைது
சம்பவத்தில் பெலியத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய ஹயஸ் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் விபத்து நடந்த விதம் மற்றும் சாரதியின் கவனக்குறைவு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பெலியத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan