பாதையில் நடந்து சென்ற இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்
புத்தளம்(Puttalam) - மதுரங்குளிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கிச் சென்ற வான் ஒன்று பாதையில் நடந்து சென்ற குறித்த இளைஞன் மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதுரங்குளிய - முக்குதொடுவ பகுதியைச் சேர்ந்த 21 வயதான மானென் நெத்மிக என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
21 வயதான மானென் நெத்மிகா இரண்டு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் மூத்த பிள்ளை எனத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்றையதினம் தற்காலிகமாக விடுதியொன்றில் தங்கியிருந்து வீட்டிற்கு செல்லும் வழியிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த அவர், புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாகவும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |