யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!
யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவருடன் சென்ற மற்றொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குறித்த சம்பவமானது நேற்றுமுன்தினம் (7) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில், ஆவரங்கால் மேற்கு, புத்தூர் பகுதியைச் சேர்ந்த பரிஷ்ணன் அஜய் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றிரவு புத்தூர் கலைமதி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கரப்பந்தாட்டத்தை பார்த்துவிட்டு குறித்த இரண்டு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பருத்தித்துறை வீதி, புத்தூர் சந்திக்கு அருகாமையில் இருந்த மின்கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது இருவரையும் அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை குறித்த இளைஞன் அங்கேயே உயிரிழந்தார்.
சிகிச்சை
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
மற்றைய இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 18 மணி நேரம் முன்

ஈஸ்வரியை சீக்ரெட்டாக வந்து சந்தித்த நபர், பிரச்சனையில் சிக்கப்போகும் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
