லொறி மோதி இளைஞர் பலி
கண்டி, நாவலப்பிட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரபல சிறப்பு அங்காடி கிளை ஒன்றில் பொருள்கள் இறக்க முற்பட்ட போது இடம்பெற்ற விபத்தில், லொறியின் உதவியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தத் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குருநாகல் பகுதியிலிருந்து நாவலப்பிட்டியிலுள்ள சிறப்பு அங்காடிக்கு உணவுப் பொருள்களை ஏற்றி வந்த கனரக லொறி ஒன்று, நேற்று(01.05.2026) காலை பொருள்களை இறக்குவதற்காகப் பின்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணை
இதன்போது, லொறியின் பின்புறத்துக்கும் அங்கிருந்த களஞ்சியசாலைச் சுவருக்கும் இடையிலான குறுகிய இடைவெளியில் லொறியின் உதவியாளர் எதிர்பாராத விதமாகச் சிக்குண்டுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த 24 வயதுடைய இளைஞர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பாக லொறியின் சாரதியை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சாரதியின் கவனக்குறைவே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam