திருகோணமலையில் வாகன விபத்து : இளைஞன் பலி
திருகோணமலை மாவட்டம் சம்பூர் பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட சேனை யூர் - மயிலிமலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சேனையூர் 6ம் வட்டாரத்தைச் சேர்ந்த வி.விதுர்சன் (வயது 21) என்ற இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் கருங்கற்களை ஏற்றிச் செல்கின்ற டிப்பர் வாகனமே மோதியுள்ளதாக சந்தேகம் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஒரு டிப்பர் வாகனம் கைப்பற்றப்பட்டு அதன் சாரதி சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக சம்பூர் பொலிஸார்தெரிவிக்கின்றனர்.
பிறவிகுறைபாடு
இதேவேளை சடலம் தற்போது மூதூர் தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் பிறவிகுறைபாடு உடையவர் என்பதுடன் இறந்தவரின் சகோதரரும் சில வருடங்களுக்கு முன்னர் இவ்வாறான நிலையில் உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலும் விபத்து தொடர்பான விசாரனையை சம்பூர் பொலிஸார் மேற்கொள்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri
