ஜீவன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற இளைஞர் மாநாடு
மலையக மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு (NAAM 200) "இளைஞர்களின் எழுச்சி" எனும் தொனிப்பொருளில் இளைஞர் மாநாடானது கண்டியில் நடைபெற்றது.
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் குறித்த இளைஞர் மாநாடானது இடம்பெற்றிருந்தது.
குறித்த நிகழ்வில் விசேட விருந்தினராக பங்கேற்றிருந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் உறையாற்றும் போது,
அரச வேலை வாய்ப்பு
''நாம் எப்பொழுதுமே பெரிதும் எதிர்பார்ப்பது அரச வேலை வாய்ப்புகளை மாத்திரமே, ஆனால் அது தவறல்ல தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் சுயத்தொழில் முயற்சியான்மை போன்றவற்றில் ஈடுபடுவது எதிர்காலத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதனை நாம் உனர வேண்டும்.
குறிப்பாக இந்த காலக்கட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் பெருந்தோட்ட துறையினரை பொறுத்தவரையில் 30 சதவீதமான மாணவர்களுக்கு மாத்திரமே தரமான கல்வி கிடைக்கின்றது.
அதேபோல் குறைந்த அளவிலான தொழில் வேலைவாய்ப்புகளே காணப்படும். இந்த சமயத்தில் நாம் அதனை எவ்வாறு பயன்படுத்திய வெற்றிக்கொள்ள வேண்டும் என்பதனை எதிர்கால இலக்காக கொண்டு பயணிக்க வேண்டும்.
மேலும் இந்த மாநாட்டை நடாத்துவதற்கான பிரதான காரணமாக காணப்படுவது எமது சமுதாயம் மத்தியில் ஒரு விடயத்தை வெற்றிக்கொள்ள அதாவது தேர்வு செய்து கொள்வதற்கு பிறரை நாட வேண்டிய சூழ்நிலையே காலகட்டத்தில் காணப்படுகிறது.
சமூக முயற்சி
ஆனால் அது ஒன்றும் தவறல்ல நம்மைப் பொறுத்தவரையில் அரச வேலைவாய்ப்பு தவித்து சமூக முயற்சி, சமுதாய முயற்சி மற்றும் சுயத்தொழில் முயற்சி ஆகியவற்றை இலக்காக கொண்டு பயணிப்போமானால் எமது எதிர்காலமானது சுபீட்சமாக அமையும் என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகின்றேன்.
முதலில் நம்மை நாம் மதித்து பழக வேண்டும். பின்னர் நாம் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கி அனைத்து வகையான வெற்றிகளையும் பெறக்கூடியதாக காணப்படும்.
ஆகவே என்றும் எப்பொழுதும் நான் உங்களுடைய பிரதிநிதி, உங்களுக்காகவே நான் சேவை செய்ய தயாராக இருக்கின்றேன். எந்த சந்தர்ப்பத்திலும் நான் உங்களை கைவிட மாட்டேன் உங்களுக்கு உறுதுணையாக நிற்பேன்" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |