கொழும்பு புறநகர் பகுதியில் சோதனை வேட்டை - கிலோகணக்கான கஞ்சாவுடன் சிக்கிய இளைஞர்
பண்டாரகம பொலிஸ் பிரிவின் மஸ்வில பகுதியில் 18 கிலோகிராம் மற்றும் 672 கிராம் போதைப்பொருள் மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று(18.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஹொரானா பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை தலைமையகத்தின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவின் பொலிஸ் குழுவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
18 கிலோகிராம் கஞ்சாவுடன் கைது
இதன்போது, 18 கிலோகிராம் மற்றும் 672 கிராம் போதைப்பொருள் மாத்திரைகளைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர், பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஆவார்.
இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.