மரத்தில் இருந்து வீழ்ந்து குடும்பஸ்தர் மரணம்
வவுனியா, நொச்சிமோட்டை பகுதியில் மரத்தில் இருந்து வீழ்ந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (18.08.2026) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மரம்வெட்டும் தொழிலை மேற்கொள்கின்ற குறித்த நபர் வவுனியா, நொச்சிமோட்டை பகுதியில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தவறுதலாக மரத்தில் இருந்து கீழே வீழ்ந்துள்ளார்.
பொலிஸார் மேலதிக விசாரணை
இதனால் படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் ஓமந்தை பகுதியை சேர்ந்த குமார்(வயது 45) என்ற குடும்பஸ்தரே மரணமடைந்தவராவார்.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.