14 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி: இளைஞன் கைது
காத்தான்குடி - கர்ப்பலா பிரதேசத்தில் 14 வயது சிறுவனின் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்திய இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது சம்பவம் நேற்றுமுன் தினம் (07.10.2022) நடந்துள்ளது.
வீதியால் குறித்த 14 வயது சிறுவன் வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த போது வீதியில் நின்றுக்கொண்டிருந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவன் சிறுவனை பார்த்து ''என்னடா என்னை பார்க்கின்றாய்'' என கேட்டு சிறுவன் மீது கத்திகுத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படுகாயமடைந்த சிறுவன்
இந்நிலையில் சிறுவன் கத்தியதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக படுகாயமடைந்த சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.

போதைப்பொருள் பாவனை
கத்திகுத்து தாக்குதலை நடத்திய இளைஞனை பொலிஸார் கைது செய்த போது குறித்த இளைஞன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட இளைஞனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 13 மணி நேரம் முன்
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam