வல்லிபுரத்தில் கேரள கஞ்சாவுடன் வத்திராயன் இளைஞர் கைது
யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி, வல்லிபுரம் காட்டுப் பகுதியில் ஒரு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பருத்தித்துறையில் உள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் கரவெட்டி - யாக்கரு விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து பருத்தித்துறை - வல்லிபுரம் காட்டுப் பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, இரண்டு சாக்குகளில் அடைக்கப்பட்ட ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 29 பொதிகள் அடங்கிய 60 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் வத்திராயன் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட கேரள கஞ்சா
கைதான நபர் மீட்கப்பட்ட கேரள கஞ்சாவுடன் பருத்தித்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
