கிளிநொச்சியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது
கிளிநொச்சி விசுவமடுவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபரை நேற்று(02.02.2024) பொலிஸார் கைது செண்துள்ளனர்.
கிளிநொச்சி விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து விசுவமடு பகுதியில் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட படையினர் 21கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞனை கைது செய்து புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இதன்போது போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் விசுவமடு- ரெட்பானா பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனை கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞனை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 5 மணி நேரம் முன்

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
