சாட்டை துரைமுருகன் வீட்டில் சோதனை: கைப்பற்றப்பட்ட தமிழீழ விடுதலை புலிகள் தொடர்பான புத்தகங்கள்
நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகரான சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டு தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பான புத்தகமொன்று எடுத்து செல்லப்பட்டுள்ளது.
திருச்சி வயலூர் சாலை சண்முகா நகரில் உள்ள அவரின் இல்லத்திலேயே இன்று (02.02.2024) காலை இந்த தீவிர சோதனை நடந்துள்ளது.
சோதனை நடைபெற்ற நேரத்தில் சாட்டை துரைமுருகன் வீட்டில் இல்லாததால் அவரது மனைவி மாதரசியிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது.
மறு விசாரணை அழைப்பாணை
தொடர்ந்து, அவரது வீட்டில் இருந்து நெடுமாறன் எழுதிய 'பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்' என்ற புத்தகமும் 'திருப்பி அடிப்பேன்' என்ற சீமான் எழுதிய புத்தகமும் எடுத்துச் செல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், சாட்டை துரைமுருகனின் மனைவியிடம் மறு விசாரணை அழைப்பாணையும் கொடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, காளப்பட்டி பகுதியில் முருகன் என்பவரின் வீட்டிலும் சோதனை நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam