கோமரங்கடவல பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் கைது
திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு நேற்றிரவு (16) கைது செய்யப்பட்டவர் கோமரங்கடவல-சமகி மாவத்தை பகுதியைச் சேர்ந்த லஹிறு சதறுவன் (26 வயது) எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கோமரங்கடவல பொலிஸார் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது குறித்த வீதியால் பயணித்த இளைஞரைச் சோதனையிட்ட போது அவர்களிடமிருந்து 5 கிராம் 600 மில்லிகிராம் ஹொரோயின் போதைப்பொருள் கைப்பற்றாட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை திருகோணமலை நீதிமன்றில் முன்னிறுத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சந்தேகநபர் தொடர்பில் விசாரணைகளை
மேற்கொண்டு வருவதாக கோமரங்கடவல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.





இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam
