வவுனியாவில் இளைஞர் ஒருவர் விசேட அதிரடி படையினரால் கைது
வவுனியா- தாண்டிக்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இன்று (16.11) இடம்பெற்று இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா- தாண்டிக்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களுக்குப் போலியான இலக்க தகடுகள் வடிவமைத்து வழங்கப்படுவதாகவும், அம் மோட்டார் சைக்கிள் இலக்கத் தகடுகளைப் பொருத்தி திருட்டுச் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் முல்லைத்தீவு விசேட அதிரடிப் படையினருக்குக் இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வாகன இலக்கத்தகடுகள் வழங்கும் நிலையம் ஒன்றும் சோதனை செய்யப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த நிலையத்தில் கடமையாற்றிய இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டதுடன், அங்கு இருந்த கணினி மற்றும் வாகன இலக்க தகடுகள் என்பனவும் விசேட அதிரடிப்படையினால் எடுத்துச் செல்லப்பட்டு வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam