திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் கைது(Photos)
திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, பண்டாரிக்குளம், திருவள்ளுவர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த சனிக்கிழமை நகைகள் திருடப்பட்டுள்ளன.
திருட்டு சம்பவம்
குறித்த நகையினை வீட்டில் வைத்து விட்டு வீட்டார் வவுனியா நகருக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய போது வீட்டின் பின்கதவு திறக்கப்பட்டு இருந்ததுடன், வீட்டு அலுமாரிகளும் திறக்கப்பட்டுள்ளன.
வீட்டு அலுமாரிகளை பார்வையிட்ட போது அதில் இருந்த பூட்டுகாப்பு, மோதிரம், தோடு, பென்ரன் உள்ளிட்ட 5 அரைப் பவுண் நகைகள் காணாமல் போயுள்ளன.
இதனையடுத்து வீட்டு உரிமையாளரால் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பொலிஸாரின் நடவடிக்கை
இதற்கமைய, வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர்,பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 9 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைக்கப்பட்ட நிலையில் 5 அரைப் பவுண் நகையும் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்கு குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.



