ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது
பதுளையில் (Badulla) ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (25) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, 24 வயதுடைய சுவினிதகம பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது
நேற்று இரவு பதுளை பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது பதுளை நகரில் சந்தேகத்துக்கிடமான நபர் ஒருவரைச் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதன்போது மேற்படி நபர் சூட்சுமமான முறையில் தன் கைவசம் மறைத்து வைத்திருந்த 5400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளைக் கைப்பற்றியுள்ளதாகப் பதுளை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் ,சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் அவரைப் பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தப்பிக்க நினைத்து முத்துவின் கண்ணில் பட்ட ரோஹினி மாமா, இனி நடக்கப்போவது என்ன?- சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

5 நாள் முடிவில் வெற்றிப்பெற்றுள்ள டிராகன் திரைப்படம் செய்த வசூல்... தமிழகத்தில் மட்டுமே இவ்வளவா? Cineulagam

எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமைக்கு ஆபத்து? 2.5 லட்சம் கனேடியர்கள் மனுவில் கையெழுத்து News Lankasri
