நாணயக்குற்றிகளை விற்பனை செய்ய முயன்ற இளைஞர் கைது
புதையலில் இருந்து கிடைக்கப் பெற்ற தொல்பொருள் எனக் கூறி சில நாணயக்குற்றிகளை விற்பனை செய்ய முயன்ற இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் மன்னார் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ள வீரசிங்க, உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராய்ச்சி, மன்னார் மாவட்ட விசேட விசாரணை பிரிவு தற்காலிக பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மேற்படி தொல்பொருள் நாணயம் என கூறப்படும் 257 நாணய குற்றிகளை கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் பெரிய பண்டிவிரிச்சான் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து நேற்று மாலை, புதையலில் இருந்து கிடைக்கப் பெற்ற தொல்பொருள் நாணயக் குற்றிகள் எனக் கூறி விற்பனை செய்ய முயன்ற போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த நபரை மன்னார் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்ற நிலையில் விசாரணையின் பின் குறித்த நபர் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மீட்கப்பட்ட நாணயக்குற்றிகளும் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam