வவுனியாவில் பல மோட்டர் சைக்கிள்களை திருடிய இளைஞர் கைது!
வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் 5 பல்சர் மோட்டர் சைக்கிள்களை திருடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது இன்று இடம்பெற்றதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருட்டு சம்பவங்கள்
இம்மாதம் வவுனியா, ஈரப்பெரியகுளம், மதவாச்சி, வவுனியா - முதலாம் குறுக்குத் தெரு, மதவாச்சி - அட்டவீரக் கொட, செட்டிகுளம் ஆகிய பகுதிகளில் பல்சர் ரக மோட்டர் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன.
குறித்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக தலைமையிலான பொலிஸ் குழு தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.
விசாரணை
இதன்போது சிதம்பரபுர வீதி, ஈரப்பெரியகுளம் பகுதியில் வசிக்கும் 27 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த 5 பல்சர் மோட்டர் சைக்கிள்களும் முறையே 550000, 299500, 500000, 300000, 970000 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த 5 பல்சர் மோட்டர் சைக்கிள்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞரை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan
