கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞர் கைது (Photo)
மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி குடாமுனை பிரதேசத்தில் சட்டவிரோதமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கசிப்பு வியாபாரி 60 போத்தல் கசிப்புடன் இன்று(30) பகல் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் கூறியுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய சம்பவதினமான இன்று பகல் குறித்த பகுதியிலுள்ள வீட்டை பொலிஸாருக்கு சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
இதன் போது கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட 25 வயதுடைய இளைஞன் ஒருவரைக் கைது செய்துள்ளதுடன், அங்கு மறைத்துவைக்கப்பட்டிருந்த 60 போத்தல் கொண்ட கசிப்பை மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




