ஆசிய நாடொன்றில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 26 பேர் பலி - நூற்றுக்கணக்கானோர் படுகாயம்
மத்திய பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
செபு நகரின் கடற்கரைக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கத்தில் மேலும் 147 பேர் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுனாமி எச்சரிக்கை
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட விசயாஸ் பகுதியில் அமைந்துள்ள செபு நகரத்தில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் வசிப்பதாக தரவுகள் காட்டுகின்றன.
இந்நிலையில், கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
🇵🇭💔 #Sismo #Terremoto Tragedia en #Filipinas: el fuerte sismo de magnitud 6.9 del 30 de septiembre ya dejó 26 personas fallecidas y al menos 147 heridas.
— La Cebadina Noticias (@LaCebadinaNoti) October 1, 2025
🚑🚒🚨Las autoridades continúan con labores de rescate y evaluación de daños en las zonas más afectadas. pic.twitter.com/dI2HyP5sIL
அனர்த்தத்தின் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டு கட்டிடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்று பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Quartersகு செல்வதாக செந்தில் கூறிய விஷயம், பாண்டியனின் ஷாக்கிங் பதில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

சிந்தாமணியை வைத்து மீனாவை அழ வைக்க ரோஹினி போட்ட கேவலமான பிளான்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
