பொலிஸ் அதிகாரியைத் தாக்கி கைத்துப்பாக்கியைப் பறித்த இளைஞன் கைது
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நாலக சேனநாயக்கவைத் தாக்கி, அவரது கைத்துப்பாக்கியைப் பறித்த சம்பவம் தொடர்பாக 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் ஒன்பதாம் திகதி காலிமுகத்திடல் வன்முறைச் சம்பவத்தின் பின்னர் ஏற்பட்ட பதற்ற நிலையின் போது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை

குறித்த தினத்தன்று பஞ்சிகாவத்தை ஊடாக நாலக சேனநாயக்க சென்ற போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உள்ளிட்ட குழுவொன்று அவரைத் தாக்கி கைத்துப்பாக்கியை பறித்துச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் மாளிகாவத்தைப் பகுதியைச் சேர்ந்த 18 வயதான வாலிபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து கைத்துப்பாக்கி, 10 தோட்டாக்கள் மற்றும் தோட்டா உறை என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபரை மாளிகாகந்த நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
| மின்சார கட்டணங்களை உயர்த்தமுடியாது! பொறியியலாளர்கள் மீது குற்றம் சுமத்தும் எரிசக்தி அமைச்சர் |
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam