மின்சார கட்டணங்களை உயர்த்தமுடியாது! பொறியியலாளர்கள் மீது குற்றம் சுமத்தும் எரிசக்தி அமைச்சர்
300 வீத கட்டண உயர்வு
மின்சார சபையின் சில பொறியியலாளர்கள், மின்சாரக் கட்டணங்களை 300 வீதமாக உயர்த்தவேண்டும் என்று கோருகின்றபோதும், அதற்கு தாம் உடன்படப்போவதில்லை என்று மின்சக்தி மற்றும் எரிசக்திதுறை அமைச்சர் கஞ்சன விஜேயசேகர தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டங்களுக்கு உதவாத நிலையில், சிலரின் கோரிக்கைகளுக்கு இணங்க, மின்சார கட்டணங்களை திருத்தம் செய்யமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பணியாளர்களுக்கு 3வீத சம்பள அதிகரிப்பு
மின்சார சபை பணியாளர்களுக்கு வருடாந்தம் 3 வீத சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவதற்கு ஏற்கனவே உடன்படிக்கை உள்ளது.
எனவே அதனை உறுதிப்படுத்திக்கொள்வதற்காகவே மின்சாரசபையின் சிலர் கட்டணங்களை அதிகரிக்கக்கோருவதாக காஞ்சன விஜயசேகர தெரிவித்தார்.
மின்சாரசபையின் தொழிற்சங்க போராட்டம்- கஞ்சன விஜேசேகர எச்சரிக்கை |
எனவே சம்பளத்தை அதிகரிப்பதை கருத்திற்கொண்டு செயற்படாமல், உற்பத்திச் செலவை குறைப்பதற்கு செயற்படவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை மின்சாரசபையின் சிலர் நாட்டை இருளடையச் செய்யப்போவதாக எச்சரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது பயங்கரவாத செயற்பாடு என்றும் அவர் தெரிவித்தார்.