மின்சாரசபையின் தொழிற்சங்க போராட்டம்- கஞ்சன விஜேசேகர எச்சரிக்கை
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திட்டங்கள் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இலங்கை மின்சார சபைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவொன்றிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கஞ்சன விஜேசேகரவின் கருத்து
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திட்டங்களுக்கு இலங்கை மின்சார சபை உதவாததால், கட்டண விகிதங்களை அதிகரிப்பதற்கான இலங்கை மின்சார சபையின் கோரிக்கையை அமைச்சரவைக்கு எடுத்துச் செல்லப் போவதில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமது சொந்த சம்பளத்தை செலுத்துவதற்காக கட்டணங்களை அதிகரிப்பதை விட, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை தொடரவும், உற்பத்தி செலவுகளை குறைக்கவும் இலங்கை மின்சார சபை அனுமதிக்க வேண்டும் என்று அமைச்சர் விஜேசேகர வலியுறுத்தியுள்ளார்.
1) I will not take CEB request to increase tariff rates to the cabinet since CEB does not assist the renewable energy generation plans. CEB should allow renewable projects to proceed and reduce generation cost rather than increasing tariffs to pay their own salaries.
— Kanchana Wijesekera (@kanchana_wij) June 8, 2022
ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் அவர்களது சொந்த சம்பளம் 25% அதிகரிக்கப்படும் என்ற கூட்டு ஒப்பந்தத்தை இலங்கை மின்சார சபை கொண்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அல்லது உற்பத்தி செலவைக் குறைப்பதற்கான திட்டங்கள் எதுவும் இல்லாததால், அதிக சம்பளம் மற்றும் உற்பத்தி செலவுகள் நுகர்வோர் மீது சுமத்தப்படுகின்றன, என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
2) CEB has a collective agreement that every 3 years their own salaries are increased by 25%. With no plans for renewable energy or cost reduction in generation the high cost of salaries and generation costs are put on the consumers. This has to change and no better time to do it
— Kanchana Wijesekera (@kanchana_wij) June 8, 2022
இது மாற வேண்டும் என்று கூறிய அமைச்சர் கஞ்சன விஜேசேகர, "இதைச் செய்வதற்கு இதைவிட சிறந்த நேரம் இல்லை" என்றும் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க போராட்டம்
இதேவேளை, இன்று (8) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தொழிற்சங்க போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது.
நாளை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள மின்சாரம் தொடர்பான திட்டங்கள் உட்பட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.