யாழில் இ.போ.ச சாரதியை போதையில் தாக்கிய இளைஞன் கைது
மதுபோதையில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்தின் நடத்துனரை தாக்கிய குற்றத்தில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்தில், நிறை போதையில் மிதிபலகையில் நின்று பயணித்தவரை நடத்துனர் பேருந்தில் இருந்து இறங்குமாறு கூறியுள்ளார்.
இளைஞன் கைது
அதனால் நடத்துனரும், மதுபோதையில் இருந்த இளைஞனுக்கும் இடையில் முறுகல் நிலைமை ஏற்பட்டதில் , இளைஞன் நடத்துனரை தாக்கியுள்ளார்.

அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் இளைஞனை மடக்கி பிடித்து, யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசாரிடம் இளைஞனை ஒப்படைத்தனர்.
இளைஞனை கைது செய்த பொலிஸார் பொலிஸ் நிலையம் கொண்டு சென்று தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan