மன்னார் கடல் பகுதியில் ஆபத்தாக மாறும் பிளாஸ்ரிக் பொருட்கள்
அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலிலிருந்து வெளியேறிய, ஆபத்தான பொருட்கள் எனச் சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் மன்னார் வங்காலை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளதாக வங்காலை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்காலை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள கடற்பரப்பிலேயே இன்று காலை மேற்படி சிறிய பிளாஸ்ரிக் உருண்டைகள் எனச் சந்தேகிக்கப்படும் பொருட்கள் கரை ஒதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறிய உருண்டைகள் கடற்கரையோரங்கள் முழுவதிலும் சிதறிக் கிடப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
குறித்த பகுதிக்கு மன்னர் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் நேரடியாகச் சென்று கரை ஒதுங்கியுள்ள பிளாஸ்ரிக் பொருட்கள் தொடர்பாகப் பார்வையிட்டுள்ளனர்.
தென்பகுதியில் எறிந்த கப்பலின் தாக்கம் குறித்த பகுதியிலும் உணரப்பட்டுள்ளது.
மேலும் அரிப்பு பகுதியிலும் குறித்த பிளாஸ்ரிக் பொருட்கள் கரை ஒதுங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.

















உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri