இலங்கையில் கொரோனா தடுப்பூசியால் பாதிக்கப்படும் இளைஞர்கள்
கொரோனா தொற்றினை தடுப்பதற்காக வழங்கப்படும் எஸ்ட்ரா செனிக்கா எனப்படும் கொவிஷீல்ட் தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னர் அதிகளவான இளைஞர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் அது அச்சமடையும் விடயம் அல்ல என சுகாதார அமைச்சின் விசேட வைத்தியர் சுனில் அல்விஸ் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி வழங்கிய பின்னர் காய்ச்சல், உடல் வலி, உடலில் விறைப்புத் தன்மை, குமட்டல், வாந்தி, மற்றும் ஊசி போட்ட இடத்தில் புண் மற்றும் சிவத்தல் போன்ற சிறிய ஒவ்வாமை ஏற்படலாம். எதிர்வரும் நாட்களில் 40 - 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
அதனையடுத்து 20 - 30 வயதிற்குட்பட்டவர்களுக்கும், மூன்றாம் கட்டத்தில் 60 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.