இலங்கை மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு
இலங்கை மக்கள் தமது புகைப்படங்கள் அடங்கிய தபால் முத்திரைகளை உருவாக்குவதற்கான வாய்ப்பை தபால் திணைக்களம் வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது தபால் மா அதிபர் ருவன் சத்குமார இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் தங்களுடைய புகைப்படங்களைப் பயன்படுத்தி தபால் தலைகளை உருவாக்க முடியும். 2000 ரூபா செலவில் 20 முத்திரைகள் அடங்கிய தாள் வழங்கப்படும்.
முக்கிய நிகழ்வுகள் நினைவுகூரல்
இலங்கையில் இந்த முத்திரைகளை வழமையான முத்திரைகளாகப் பயன்படுத்த முடியும். இத்தகைய முத்திரைகள் பிறந்தநாள் அல்லது முக்கியமான நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்படலாம்.
அதே நேரத்தில் அவற்றை திருமண அழைப்பிதழ்களை இடுகையிடவும் பயன்படுத்தப்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியதன் பின் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு: கல்வி அமைச்சரின் அறிவிப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
