24 மணிநேரத்தில் பதிவான நிலவரம்: மோசமான விளைவை ஏற்படுத்துமென எச்சரிக்கை
நாட்டில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காற்றின் தரக் குறியீட்டின் படி நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் இந்த நிலைமை பதிவாகியுள்ளது.
அதன்படி இன்றைய தினம் கொழும்பின் காற்று மாசு 127 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலை உணர்திறன் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசுக் குறியீடு
அத்துடன் காலி கராப்பிட்டியவில் 90 ஆகவும், புத்தளத்தில் 88 ஆகவும், குருநாகல் மற்றும் அனுராதபுரத்தில் 86 ஆகவும் காற்று மாசு சுட்டெண் பதிவாகியுள்ளது.
மேலும் நாட்டின் காற்று மாசுக் குறியீடு 50ஐத் தாண்டியிருப்பதால், மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், இது குறித்து கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam