போலி விசா வழங்கிய இளைஞனை அதிரடியாக கைது செய்த பொலிஸ்
போலி இணையத்தளத்தை உருவாக்கி விசா வழங்கிய சந்தேகநபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கொழும்பில் உள்ள இந்திய விசா நிறுவகத்தின் கிளையொன்று கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோபல்லவ மாவத்தை பகுதியில் செயற்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபரால் அந்த நிறுவனத்தின் தகவல்களுடன் இணையத்தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
சில காலமாக வீசா வழங்குவதாக மக்களிடம் மோசடியாக பணம் பெற்று வந்த சந்தேகநபர் கடந்த மார்ச் 28 ஆம் திகதி வத்தேகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். இதன்போது மடிக்கணினி மற்றும் கைத்தொலைபேசி என்பனவும் மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பன்வில பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவராகும். ஆள்மாறாட்டம், மோசடி, அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட குற்றங்கள் மற்றும் கணினி குற்றச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட குற்றங்களுக்காக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri