இளைஞர், யுவதிகள் அதிகூடிய வாக்கினையளித்து சிறையிலிருந்து மீட்டனர்: சிவநேசதுரை சந்திரகாந்தன் (Photos)

Government Easternprovince Tamilpeople Sivanesathuraisanthirakanthan
By Kumar Jan 26, 2022 06:59 PM GMT
Report

இந்த மண்ணை நம்பி பணியாற்றியவன்,கிழக்கு மாகாணத்தின் தனித்துவம்பற்றி பேசியவரை வடக்கு தலைவர்கள் அழிக்க நினைக்கின்றார்கள் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இளைஞர்,யுவதிகள் அதிகூடிய வாக்கினையளித்து கௌரவத்துடன் சிறையிலிருந்து மீட்டெடுத்தனர் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுங்கான்கேணி கிராமத்திற்கான பிரதான வீதியைப் புனரமைப்பதற்கான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் முன்மொழிவுகளுக்கு அமைவாக வீதி பெருந்தெருக்கள் அமைச்சு இதற்காக 68மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளது.

2.69 கிலோ மீற்றர் நீளமான கோறளைப்பற்று சுங்கான்கேணி கிராம வீதியானது நீண்டகாலம் புனரமைக்கப்படாத நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனால் புனரமைப்பதற்கான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன், கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சோபா ரஞ்சித் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய சந்திரகாந்தன்,

வடக்கு, கிழக்கில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர்களில் அதிகூடிய விரும்புவாக்கு எனக்கு கிடைத்தது. அதற்குக் காரணம் இந்த மண்ணை நம்பி பணியாற்றியவன், கிழக்கு மாகாணத்தின் தனித்துவம்பற்றி பேசியவரை வடக்கு தலைவர்கள் அழிக்க நினைக்கின்றார்கள், காப்பாற்றவேண்டும் என்பதற்காக இளைஞர் யுவதிகள் அதிகூடிய வாக்கினையளித்து கௌரவத்துடன் சிறையிலிருந்து மீட்டெடுத்தனர்.

நான் சிறையிலிருந்து வெளிவரும்போது கோவிட் தொற்று உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுவிட்டது. நாங்கள் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தினை விரைவாக அமுலாக்குவதில் மிகப்பெரிய சங்கடங்களும் உள்ள சூழ்நிலையில்தான் உள்ளோம்.

இருந்தபோதிலும் நாங்கள் பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் ஒரு இணக்கப்பாட்டு அரசியலை மேற்கொண்டு வருகின்றோம். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஒரு தனித்துவமான கட்சி.

எமது கட்சி பொதுஜன பெரமுனவுடன் கூட்டு வைத்துவைத்துள்ளது. அந்த கட்சியின் உறுப்பினர் இந்த நாட்டின் ஜனாதிபதியாகவுள்ளார். ஒரு இணக்கப்பாட்டுடன் நாங்கள் செயற்படுவதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தொற்றின் காரணமான கடுமையான நெருக்கடிகளுக்கும் மத்தியில் பல அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம், பலவற்றைச் செய்துவருகின்றோம்.

நான் கால்வைத்தேன் என்பதற்காகக் கட்டப்படாமலிருந்த பொதுநூலகத்திற்காக கட்டடப்பணிக்கு நான் 200மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்து பணி நடைபெற்று வருகின்றது. இந்த கோவிட் தொற்று அதிகரிக்காத நிலையிருந்தால் மேமாதம் அல்லது அதற்குப் பின்னர் நூலகம் திறந்து வைக்கப்படும்.

அதேபோன்று 62கிலோமீற்றர் பாதைகளைப் புனரமைப்புக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 100கிலோமீற்றர் முதல் கட்ட அனுமதி எனக்குக் கிடைத்திருந்தது. இரு வாரத்தில் மேலும் 40கிலாமீற்றர் வீதி வரவுள்ளது. பல அபிவிருத்தி சார்ந்த நிதிகளை நாங்கள் கொண்டுவந்திருக்கின்றோம். இந்த நன்மைகள் ஊடாக கிராமங்களில் மாற்றங்கள் ஏற்படவேண்டும்.

கல்வியும் பொருளாதாரமும் இல்லையென்றால் மிகவும் பின்தங்கிய நிலைக்குச்சென்றுவிடும். அதனை கட்டியெழுப்புவதற்கான தளம் இன்னும் எங்களுக்கு போதாதாகவேயுள்ளது. நாங்கள் எமது பிரதேசத்தின் உற்பத்தித் துறையினை சர்வதேசத்தின் தரத்திற்குக் கொண்டுசெல்வதற்கான கல்வித்துறையை நாங்கள் தேர்ந்தெடுக்கவேண்டும்.

அதேபோன்று தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கு இளைஞர் யுவதிகளுக்குத் தேவையான மொழியறிவுகளை வழங்குவதற்குக் கிராம மட்ட கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதேநேரம்,கடந்த காலத்திலிருந்த அரசியல் சாணக்கியமற்ற தமிழ் அரசியல் தலைவர்களின் வெளிப்பாடே இன்று தமிழ் மக்கள் பல்வேறு தேவைகளுடன் வாழ்வதாகத் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் இதன்போது தெரிவித்தார்.

GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US