கனடாவில் இரவு நேரத்தில் காணாமல்போன இளம் பெண் குறித்து வெளியாகியுள்ள தகவல்
கனடாவில் இரவு நேரத்தில் காணாமல் போன இளம் பெண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
Madeline Brooks என்ற 24 வயதான இளம்பெண் காணாமல் போயிருந்தமை தொடர்பில் பொலிஸார் ஏற்கனவே தகவல் வெளியிட்டிருந்தனர்.
கடந்த 25ஆம் திகதி இரவு 10.30 மணிக்கு Woodbine Av + Gerrard St E பகுதியில் கடைசியாக அவர் இருந்துள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.
5 அடி 10 அங்குலம் உயரம் கொண்ட Madeline காணாமல் போன போது என்ன உடை அணிந்திருந்தார் என தெரியவில்லை எனவும் அந்த தகவலில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே Madeline Brooks கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் உதவியவர்களுக்கு நன்றி கூறியுள்ளனர்.
MISSING:
— Toronto Police Operations (@TPSOperations) December 26, 2020
Madeline Brooks, 24
- Last seen December 25, 10:30 pm, Woodbine Av + Gerrard St E
- 5'10, slim build, brown hair, brown eyes
- There are no clothing descriptions at this time#GO2423558
^dh pic.twitter.com/GUv517fh8J