தவறான சிகிச்சையினால் உயிரிழந்த இளம் பெண் - சுகாதார அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை
திருமணமான இளம் பெண் ஒருவர் சத்திரசிகிச்சையின் போது ஏற்பட்ட தவறினால் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு ராகம வைத்தியசாலையிடம் அறிக்கை கோரியுள்ளது.
இலக்கம் 199/A தெலத்துர ஜா-அல பிரதேசத்தில் வசித்து வந்த புத்திக்க ஹர்ஷனி தர்மவிக்ரம என்ற இளம் திருமணமான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், சுகாதார அமைச்சு ராகம வைத்தியசாலைக்கு அறிக்கை கோரியுள்ளது.
தனியார் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை
பித்தப்பையில் கற்கள் இருந்த நிலையில் கடந்த 31ம் திகதி வத்தளையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது.
ராகம வைத்தியசாலையில் 25 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 25ம் திகதி உயிரிழந்துள்ளார்.
வத்தளை தனியார் வைத்தியசாலையில் உரிய பராமரிப்பு இன்றி மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையினால் தனது சகோதரி மிகவும் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக அவரது சகோதரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
திருமணமாகி ஒரு மாதமும் சில நாட்களும் ஆன நிலையில், குறித்த இளம் பெண் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சுடலைக்கழிவு அரசியல்? 1 நாள் முன்

நடிகர் சத்யராஜா இது, திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க- இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam

தனக்கு செம ஹிட் படம் கொடுத்த இயக்குனருடன் பேச்சு வார்த்தையில் நடிகர் அஜித்- யாருடன் தெரியுமா? Cineulagam

உளுந்து வடையில் நடுவில் ஓட்டை இருப்பதற்கு இதுதான் காரணமாம்! இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே Manithan

மொத்தமாக புரட்டிப்போட்ட நிலநடுக்கம்... இடிபாடுகளில் சிக்கி புதைந்த மகளின் கைகளை கோர்த்த நிலையில் தந்தை News Lankasri
