கொழும்பில் வைத்தியரின் தவறினால் திருமணமான 17 நாட்களில் உயிரிழந்த இளம் பெண்
கொழும்பு - வத்தளை பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அறுவை சிகிச்சை தவறான காரணத்தினால் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த 17 நாட்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட புத்திக்கா ஹர்ஷனி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அறுவை சிகிச்சை
வத்தளையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பித்தப்பை கல் அகற்றும் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறு காரணமாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் பல நாட்கள் உயிருக்கு போராடி வந்துள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
பேஸ்புக் பதிவு
இந்த நிலையில் உயிரிழந்த பெண்ணின் உறவு முறை சகோதரர் ஒருவர் இந்த சம்பவம் தொடர்பில் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் “இவர் எனது உறவு முறை சகோதரி புத்திக்கா ஹர்ஷனி தர்மவிக்ரம.இன்று அவரது பிறந்த நாள் ஆனால் அவர் சவப்பெட்டியில் வீட்டிற்கு வந்துள்ளார். மருத்துவரின் தவறால் எங்கள் தேவதையை இழந்துவிட்டோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
