கம்பஹாவில் பொலிஸாரின் குறி தவறி உயிரிழந்த இளம் பெண் தொடர்பில் வெளியான தகவல்
கம்பஹா - மீரிகம, தங்ஹோவிட பிரதேசத்தில் அண்மையில் பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் குறி தவறியதில் அனுராபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பயணிகள் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த இளம் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெந்தோட்ட - ஹபுருகல பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இரேஷா ஷியாமலி என்ற பட்டதாரியான பெண் சுற்றுலாத்துறை நிர்வாகத்தில் பட்டம் பெற்றுள்ளதுடன், இந்துருவாவில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் முகாமையாளராக பணிபுரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த இளம் பெண் தொடர்பில் தாயார் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.
உயிரிழந்த இளம் பெண் தொடர்பில் வெளியான தகவல்
இவ்வாறு உயிரிழந்த இளம் பெண் வாழ்க்கையில் ஆயிரம் நம்பிக்கைகளுடனும், கனவுகளுடனும் தனது கனடா பயணம் விரைவாக இருக்க வேண்டும் என்று நினைத்து. தனது சகோதரர் மற்றும் சகோதரியுடன் கம்பஹா பகுதியிலுள்ள ஆலயமொன்றிற்கு சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வீடு திரும்பிய போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளார்.
என் குழந்தை கடவுளின் விமானத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளார். திங்கட்கிழமை வருகின்றேன் என்று தொலைபேசி அழைப்பு மேற்கொண்டார். ஆனால் என் அருமை மகள் இப்படி வருவார் என்று கனவிலும் நினைக்கவில்லை.
வெளிநாட்டில் வேலை கிடைத்து, நல்ல வீடு கட்டி, பெற்றோருக்கு வசதியான வாழ்க்கையை அமைத்து, சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் கனடா செல்ல முடிவு செய்திருந்தாள். அதை என்னிடம் சொல்லியிருந்தாள்.ஆனால் அவளுடைய விதி காளியால் குறுக்கிடப்பட்டது. அவள் தயக்கமின்றி வாழ்க்கையை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.
திங்கட்கிழமை வருகின்றேன் என்று சொன்னாள். ஆனால் வரவேயில்லை.எனவே பெற்றோர் பிள்ளைகள் தொடர்பில் கவனமாக இருங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.



