கொழும்பில் ரயிலில் மோதுண்டு இளம் யுவதி பரிதாப மரணம்!
கொழும்பில் ரயிலில் மோதுண்டு இளம் யுவதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பலப்பிட்டி ரயில் நிலையத்துக்கு அருகில், மருதானையிலிருந்து பெலிஅத்த நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டே குறித்த யுவதி மரணமடைந்துள்ளார்.
மாளிகாதென்ன, வெயாங்கொட பிரதேசத்தை சேர்ந்த 19 வயது யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது சடலம் மாதம்பை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புத்தளத்திலும் ரயிலில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாரவில பொலிஸ் பிரிவில் கொழும்பு சிலாபம் ரயில் பாதையில் சிறிய பாலத்துக்கு அருகில் ரயிலில் மோதுண்டு குறித்த பெண் மரணமடைந்துள்ளார்.
மாதம்பை பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டே குறித்த யுவதி மரணமடைந்துள்ளார்.
பிரேத பரிசோதனைக்காக மாதம்பை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri
