யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட யுவதி உயிரிழப்பு!
யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இருபாலை, கோப்பாய் கிழக்கு என்ற முகவரியை சேர்ந்த 24 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் இன்றையதினம் (09.11.2025) அதிகாலை 2.00 மணியளவில் மூச்செடுப்பதற்கு சிரமப்பட்டுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனை
இந்நிலையில், நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கியதையடுத்து, நோயாளர் காவு வண்டியில் அங்கு வந்தவர்கள் யுவதி ஏற்கனவே உயிரிழந்துள்ளாதாக தெரிவித்து திரும்பி சென்றனர்.

பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri
100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan