மட்டக்களப்பில் செவ்வந்தி பாணியில் செயற்பட்டுவந்த போலி சட்டத்தரணி.. அதிர்ச்சியில் மக்கள்!

Sri Lanka Police Batticaloa Eastern Province Crime
By Bavan Nov 09, 2025 03:43 PM GMT
Report

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் உள்நுழைந்து வழக்காடி தருவதாக பொதுமக்கள் பலரிடம் பல இலட்சம் ரூபாவை மோசடி செய்த ஆண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நபரை நேற்று (08.11.2025) சனிக்கிழமை ஓந்தாச்சி மடத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், 

மட்டக்களப்பில் ஒரு வீட்டிலிருந்து திருடப்பட்ட தங்க நகைகள், பின்னர் மீட்கப்பட்டு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

கொத்தலாவல பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு மாணவி உயிரிழப்பு

கொத்தலாவல பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு மாணவி உயிரிழப்பு

முன்நகர்வு பத்திரம்

குறித்த தங்க நகைகளை மீளப் பெறுவது தொடர்பாக மட்டக்களப்பு நீதிமன்றில் இடம்பெற்றுவரும் வழக்கு விசாரணையை வழக்காடுவதற்கு நல்ல சட்டத்தரணி ஒருவரை அவற்றின் உரிமையாளரான பெண்ணொருவர் தேடியுள்ளார்.

அவருக்கு அறிமுகமான ஒருவர், தனக்கு வழக்காடிய நல்ல சட்டத்தரணி ஒருவர் இருப்பதாக போலி சட்டதரணியின் தொலைபேசி இலக்கத்தை வழங்கியுள்ளார்.  

இதனையடுத்து, குறித்த பெண் அந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்ட நிலையில், போலி சட்டத்தரணி தான் அந்த தங்க ஆபரணங்களை மீட்டு தருவதாகவும் இதனை மிக விரைவாக மீட்பதற்கு நீதிமன்றத்தில் சிலருக்கு பணம் வழங்க வேண்டும் எனவும் கூறியதோடு வழக்கு தொகையாக எனக்கு 2 இலட்சம் ரூபாய் தருமாறும் கோரியுள்ளார்.

மட்டக்களப்பில் செவ்வந்தி பாணியில் செயற்பட்டுவந்த போலி சட்டத்தரணி.. அதிர்ச்சியில் மக்கள்! | Fake Male Lawyer Arrested In Batticaloa

அதற்கு குறித்த பெண் சம்மதித்து அவருக்கு முற்பணமாக ஒரு இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளார். அடுத்து சில தினங்களின் பின்னர் கடந்த ஒக்டோபர் மாதம் வழக்கிற்கு நீதிமன்றத்துக்கு வருமாறு கடிதம் வந்துள்ளது.

இந்தநிலையில், போலி சட்டத்தரணி தான் முன்நகர்வு பத்திரம் தாக்கல் செய்ததையடுத்து, வழக்கிற்கு வருமாறு அழைப்பு கடிதம் வந்துள்ளதாக குறித்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.

அப்போது குறித்த பெண்ணுக்கு, நவம்பர் மாதம் திகதியிடப்பட்ட வழக்கை பணம் வழங்கி முன்கூட்டியே மாற்றியிருப்பதால் 3 தினங்களில் நீதிமன்றத்துக்கு வருமாறு அழைப்பு கிடைத்துள்ளது. 

வழக்கு விசாரணை

இதனையடுத்து, அங்குள்ள சட்டத்தரணி ஒருவருடன் தொடர்பு கொண்டு தான் கொழும்பு உயர் நீதிமன்ற சட்டத்தரணி என அறிமுகப்படுத்தி எனக்கு கல்முனை மற்றும் திருகோணமலை போன்ற உயர் நீதிமன்றங்களில் வழக்கு இருப்பதாகவும் தனது வாடிக்கையாளர் ஒருவரின் வழக்கை எடுத்து நடாத்துமாறும் கோரியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அந்த சட்டத்தரணி அந்த வாடிக்கையாளரை தன்னை சந்திக்க அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் செவ்வந்தி பாணியில் செயற்பட்டுவந்த போலி சட்டத்தரணி.. அதிர்ச்சியில் மக்கள்! | Fake Male Lawyer Arrested In Batticaloa

இதனையடுத்து, வழக்கு தொடர்பாக மட்டக்களப்பு நீதிமன்றத்தில் உள்ள குறித்த சட்டத்தரணியை பாதிக்கப்பட்ட பெண் சந்தித்து வழக்கு தொடர்பாக தெரிவித்ததையடுத்து, வழக்கு விசாரணைக்கு அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (06.11.2025) வழக்கு விசாரணைக்காக குறித்த பெண் மற்றும் போலி சட்டத்தரணி சென்றுள்ள நிலையில், ஏற்கனவே வழக்கிற்கு முன்னிலையாகிய சட்டத்தரணி இந்த போலி சட்டத்தரணி தொடர்பாக சந்தேகம் எழுந்ததையடுத்து, அவரை அங்கிருந்து பதிவாளர் காரியாலயத்துக்கு அழைத்துச் சென்று இவர் சட்டத்தரணியா என்பதை உறுதிப்படுத்துமாறு கோரியுள்ளார்.

அதனையடுத்து, நீதிமன்ற பதிவாளர் போலி சட்டத்தரணியிடம் அடையாள அட்டையை கோரிய போது, அவர் தனது வாகனத்தில் இருக்கிறது எடுத்துக் கொண்டு வருவதாக தெரிவித்து அங்கிருந்து சட்டத்தரணிகள் வாகனம் நிறுத்தும் பகுதிக்கு சென்று தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

மேலதிக விசாரணை

இதனைத் தொடர்ந்து இந்த போலி சட்டத்தரணி தொடர்பாக நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து, பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதன் பின்னர், குறித்த போலி சட்டத்தரணி நேற்று சனிக்கிழமை இரவு ஓந்தாச்சிமடத்திலுள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

மட்டக்களப்பில் செவ்வந்தி பாணியில் செயற்பட்டுவந்த போலி சட்டத்தரணி.. அதிர்ச்சியில் மக்கள்! | Fake Male Lawyer Arrested In Batticaloa

இவர், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக சட்டத்தரணி போல நீதிமன்றத்திற்குள் தனது வாகனத்துடன் உள்நுழைந்து சட்டத்தரணிகள் வாகனம் நிறுத்தும் பகுதியில் தனது வாகனத்தை நிறுத்தி நீதிமன்ற வளாகத்திற்குள் நடமாடி வந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.   

இதனைத் தொடர்ந்து, சட்டத்தரணி என அடையாளப்படுத்தும் போலி வருகை அட்டை மற்றும் இறப்பர் முத்திரை, சட்டத்தரணி என வாகனத்துக்கு அடையாளப்படுத்தி ஒட்டப்படும் ஸ்டிக்கர், கறுப்பு கழுத்துப்பட்டி, கோட் சூட், வழக்குகளை கொண்ட 16 கோப்புகள் என்பன மீட்கப்பட்டுள்ளதுடன் அவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பெரும் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

டுபாயிலிருந்து வந்த கொலை மிரட்டல்: கொழும்பில் கைது செய்யப்பட்ட குற்றக்கும்பல் தலைவர்

டுபாயிலிருந்து வந்த கொலை மிரட்டல்: கொழும்பில் கைது செய்யப்பட்ட குற்றக்கும்பல் தலைவர்

வடக்கில் கள்ளர்களுக்கு துணைப்போகும் அமைச்சர் சந்திரசேகரன்! நாடாளுமன்றில் அர்ச்சுனா காட்டம்

வடக்கில் கள்ளர்களுக்கு துணைப்போகும் அமைச்சர் சந்திரசேகரன்! நாடாளுமன்றில் அர்ச்சுனா காட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US