இளம் பெண் கொடூரமாக படுகொலை! சந்தேக நபர் கொண்டுவந்த பை தொடர்பில் வெளியான தகவல்
2ஒரு இளம் பெண் ஒருவரை கொலை செய்து, தலையில்லாத உடலை டாம் வீதியில் கைவிட்டுச் சென்ற சந்தேக நபர் கொண்டுவந்ததாக சந்தேகிக்கப்படும் தோளில் சுமந்துவந்த பை எரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேகநபரின் வீட்டிற்கு அருகே பை எரிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலிருந்து வீடு திரும்பியபோது சந்தேக நபர் அணிந்திருந்த ஆடையும் எரிக்கப்பட்டதாக முன்னதாக தெரியவந்தது.
எவ்வாறாயினும், கொலை செய்யப்பட்ட பெண்ணின் தலை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், சந்தேக நபரான பொலிஸ் உப பரிசோதகரின் வீட்டிற்கு அருகே அடுத்த சில நாட்களிலும் சிறப்பு தேடுதல் நடவடிக்கை தொடங்கப்படும் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட நிலையில், தலையில்லாத சடலமாக கொழும்பு - டாம் வீதியில் கைவிடப்பட்டிருந்த பயணப்பை ஒன்றிலிருந்து இளம் யுவதி கடந்த வாரம் மீட்கப்பட்டிருந்தார்.
குருவிட்ட தெப்பனாவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தமை இன்றைய தினம் டி.என்.ஏ பரிசோதனை ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மார்ச் முதலாம் திகதியன்று மீட்கப்பட்டது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், மொனராகலை -படல்கும்புற பகுதியில் மறுநாள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri