கிளிநொச்சியில் கடத்தப்பட்ட இளம் பெண்! 17 வயது இளைஞன் பலி - நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு
கிளிநொச்சியில் பெண் ஒருவரை கடத்திச்செல்ல முற்பட்டபோது டிப்பர் வாகனத்தின் அதிக வேகத்தினால் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
வட்டக்கச்சி புதுப்பாலம் பகுதியில் நேற்று இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, குறித்த டிப்பர் வாகனத்தை சிலர் மோட்டார் சைக்கிள்களில் துரத்திச் சென்றதாகவும், அதன்போதே டிப்பர் வாகனச் சாரதி அதி வேகமாக வாகனத்தை செலுத்தியதால் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் கிளிநொச்சி நாகேந்திரபுரம் பகுதியை சேர்ந்த 17 வயதான டிலக்சன் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வாகனத்தில் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 23 வயதுடைய பெண் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Super Singer: பாடிக் கொண்டிருக்கும் போதே நடுவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! ஃபைனலிஸ்ட்டாக சென்றவர் யார்? Manithan
