யாழில் போதைப்பொருளை ஊசி மூலம் எடுத்துக் கொண்ட இளம் அர்ச்சகர் உயிரிழப்பு
யாழ். - நல்லூர் பகுதியில் ஹேரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் எடுத்துக்கொண்ட இளம் அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நல்லூர் - நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய அர்ச்சகரே நேற்று (08.06.2023) உயிரிழந்துள்ளார்.
ஆலய பூஜை முடித்துவிட்டு வீட்டுக்கு அருகாமையில் உள்ள இடத்தில் ஊசி மூலம் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
திடீர் இறப்பு விசாரணை
குறித்த நபர் ஏற்கனவே ஹெரோயின் பாவனையில் ஈடுபட்ட நிலையில் பொலிஸாரால் கைது
செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் ஐந்து மாதங்கள் சிறையில்
இருந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அவர் சிறையில் இருந்து விடுதலையாகி சில மாதங்கள் குறித்த போதைப்பொருள் பாவனையில் இருந்து விலகிய நிலையில் மீண்டும் குறித்த போதைப்பொருளை ஊசி மூலம் செலுத்திய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.
மேலதிக தகவல் - கஜி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri
