தாய், குழந்தையை காப்பாற்ற போராடிய இளைஞர்கள்! வெளியான காணொளி
தமிழகத்தின் ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட தாய் மற்றும் குழந்தையை மீட்ட இளைஞர்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (M. K. Stalin) பாராட்டியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் நீராடிக் கொண்டிந்த போது ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் குழந்தையுடன் இளம்பெண் ஒருவர் சிக்கிக்கொண்டார்.
வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, பெரும் பாறைகள் கொண்ட இடத்தில் சிக்கிக்கொண்ட அந்த தாயையும், குழந்தையையும் மீட்க இளைஞர்கள் சிலர் முயற்சி செய்தனர்.
குழந்தையையும், தாயையும் பாதுகாப்பாக மீட்டு அழைத்து வரும்போது மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்களில் இருவர் பிடிமானம் இல்லாமல் வெள்ளநீரில் விழுந்தனர்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்கள் போராடி நீந்தி கரை சேர்ந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பலராலும் பகிரப்பட்டது.
வெள்ளப்பெருக்கின்போது தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது துணிவோடு போராடி
தாயையும் குழந்தையையும் காப்பாற்றிய இளைஞர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
முத்து தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான் Cineulagam
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan