கண்களை கறுப்பு துண்டால் கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்
திருக்கோணமலையை சேர்ந்த இளைஞர்களால் நேற்றையதினம்(24) மாநகர சபைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஊர்வலமாக பதாதைகளை ஏந்திய வண்ணம் வருகை தந்த இளைஞர் குழுக்கள் மாநகர சபை வாயிலில் கவனயீர்ப்பு ஒன்றை பதாதைகளை ஏந்திய வண்ணம் தங்களுடைய கண்களை கறுப்பு துணியால் கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.
26 ஆம் திகதி இடம்பெறவுள்ள சபை அமர்வில்
இளையோரின் தொழில் முயற்சிகளை தடை செய்யும் ரீதியில் திறந்த கேள்வி கோரப்பட்ட குத்தகை கேள்விகளின் விண்ணப்ப படிவங்களை வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்த செயற்பாடுகள் தொடர்பிலும், குத்தகை கேள்வி கோரப்பட்ட கட்டிடத்தொகுதிகளுக்கு முறையற்ற விதத்தில் குத்தகை தொகை நிர்ணயம் செய்யப்பட்டமை தொடர்பிலும், நகரின் அபிவிருத்தி மற்றும் உரிமை சார் பொதுமக்கள் நம்பிக்கைகளை மீறி, கவனயீனமாக செயல்படுவது தொடர்பிலும் கண்டனம் தெரிவித்து இந்த கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சுமார் 50க்கும் மேற்பட்ட இளையோர் கலந்துகொண்டு எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
பின்னர் மாநகர சபைக்குள் அமைதியான முறையில் உள் நுழைந்த இளைஞர்கள் மாநகர சபை முதல்வர் மற்றும் மாநகர சபை ஆணையாளரை சந்திக்க கோரிக்கை விடுத்தனர்.
இருந்த போதிலும் காவலாளியால் மாநகர சபை ஆணையாளர் இல்லை என பொய் கூறியமையால் அவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் முரண்பாடான நிலை ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாநகர சபை ஆணையாளர் கலந்துரையாடல் மேற்க்கொள்ள இளைஞர்களை மூவரை அழைத்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள சபை அமர்வில் முடிவு எட்டப்படும் என தெரிவித்ததன் அடிப்படையிலும், மாநகர சபையின் நடவடிக்கைகளில் சில தவறுகள் விடப்பட்டமை தொடர்பிலும் குறிப்பிட்டு கவனயீர்ப்பை முடித்துக் கொண்டு கலைந்து சென்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 12 மணி நேரம் முன்
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் - ஐரிஷ் வீரரின் பதிவு வைரல் News Lankasri